நாளை காந்தி ஜெயந்தி.
“மகாத்மா” என்னும் ஒற்றைச் சொல்லால் உலகமே அறியப்பட்ட மாபெரும் மனிதரை நினைவு கூறும் நாள்.”மகாத்மா” என்றால் சிறு குழந்தை கூட, காந்தி என்று புரிந்து கொள்ளக் கூடிய, ஒரு நாட்டின் தந்தை.இந்திய நாட்டிற்கு சுதந்திரம் கிடைப்பதற்கு காரணமாக இருந்தவர்களில் முதன்மையாயிருந்தஉத்தமர் என்று உலகமே ஏற்றுக் கொண்டவர்.
ஆனால்……….நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, இரண்டு தொலைக் காட்சிகளின் நிகழ்ச்சி முன்னோட்டங்கள் பற்றிய தொகுப்பைக் கண்டேன்.அவை…….
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகளாக………காலை மூத்த நடிகர் ஒருவரின் பேட்டி.அதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் ஒருவர் தனது மகனுடன் இணைந்து வழங்கும் இசை நிகழ்ச்சி. அதில் பிரபல திரைப் பிரபலங்கள் இணைந்து அடிக்கும் ஆட்டம் பாட்டம்.அதைத் தொடர்ந்து தனுஷ் என்னும் மாபெரும் நடிகரின் பேட்டிதொடர்ச்சியாக சாலமன் பாப்பையாவின் சிரிக்க வைக்கும் பட்டி மன்றம்.இவற்றுடன், முதல்வன் திரைப்படம், நட்சத்திரக் கலை விழா, நடிகை ஜோதிர்மயியின் பேட்டிநடிகர் விக்ரமின் பேட்டி. அத்துடன் மாலை “7ஜி ரெயின்போ காலனி” திரைப் படம்.
ஆனால் காந்தி……….. ஆம் அவர் இருந்தார். காலை 7 மணி முதல் 7.30 மணி வரை சிறிய ஆவணத் தொகுப்பில் மட்டும்.அரையே அரை மணி. அதுவும் காலை நேரத்தில்.இது தவிர்ந்து காந்தி……..ம்ஹூம்….. எங்குமே இல்லை.
இன்னுமொரு தொலைக்காட்சியில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டுகாலை 7 மணிக்கு ஒரு திரைப்படம்.பகல் 10.30 மணிக்கு ஒரு திரைப்படம்.மதியம் 1.30 மணிக்கு ஒரு திரைப்படம்.மாலை 5.30 மணிக்கு ஒரு திரைப்படம்.இரவு 8 மணிக்கு ஒரு திரைப்படம்.
இவை அனைத்தும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு க் காட்டப்படும் சிறப்புத் திரைப் படங்கள்.
ஆனால் காந்தி………..அவர் எங்குமே இல்லை. காந்தியா? அவர் எதற்கு?மகாத்மாவான நாட்டின் தந்தைக்கே இப்படியென்றால்…………..
நாம் ஏன் இப்படி இருக்கிறோம்தமிழன் என்ன இளிச்சவாயனா?அல்லது இளிச்சவாயன் ஆக்கப்பட்டானா?நாம் விரும்புவதால் அவர்கள் இவற்றைக் காட்டுகிறார்களா?அல்லது எமக்கு இவை, இவர்களால் திணிக்கப் படுகின்றனவா?திரைப்படங்களுக்கும், திரை உலகத்தினருக்கும், நடிகர்களுக்கும் நாம் நிரந்தர அடிமைகளாகி விட்டோமா?இது எங்கே கொண்டு போய்விடும்? நாம் சிந்திப்போமா……?
நானும் நீங்களூம் ஒரே விதமாக சிந்திக்கின்றோம். நானும் இதே விடயத்தை ப்ளாக்கில் எழுத நினைத்தேன் ஆனால் இந்திய சுதந்திரதினத்தை ஒட்டி நெஞ்சு பொறுக்குதில்லையே என எழுதி சிலரின் கண்டனத்துக்கு ஆளானேன் அதனால் விட்டுவிட்டேன்.
தீபாவளி பொங்கல் புதுவருடம் சினிமா நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது சரி ஆனால் காந்தி ஜெயந்தி விநாயகர் சதுர்த்தி சுதந்திரதினம் போன்றவற்றிற்க்கு இவை தேவையா? பாவம் கோட்சே இன்றிருந்திருந்தால் காந்தியைச் சுட்டதற்கு வருந்தியிருப்பார். இவர்கள் துப்பாக்கி இல்லாமல் காந்தியை சுடுகிறார்கள்.
எழுதியவர் வந்தி நாள் அக்டோபர் 2, 2007
நேரம் 1:30 மு.பகல்
Veetla Peaseettu irundhoam..neenga eluthitteenga..
inRaiya thalai muRaikku enna theriiya veandumo athai ninaivu koora aal iliayaa..manasu illaia… illai thevai illai enDRa mudivaa…
எழுதியவர் Mangai நாள் அக்டோபர் 2, 2007
நேரம் 4:59 மு.பகல்
உண்மைதான் வந்தி.
இனி வரும் ஒவ்வொரு காந்தி ஜெயந்தியிலும் அவரைக் கொலை செய்வார்களே என்ற பயம் எனக்கும் வந்துவிட்டது.
எழுதியவர் லீனாரோய் நாள் அக்டோபர் 2, 2007
நேரம் 10:47 மு.பகல்
நீங்க சொல்வது சரி மங்கை,
இதைப் பார்க்கும் மானமுள்ள ஒவ்வொருவருக்கும் இப்படித் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.
எழுதியவர் லீனாரோய் நாள் அக்டோபர் 2, 2007
நேரம் 10:49 மு.பகல்
தேர்தல் நாளையே விடுமுறை தினமாக நினைத்து ஓய்வெடுக்கும் குணம் தமிழனுக்கு உண்டு. அப்படியிருக்கையில் காந்தி ஜெயந்தியாக இருந்தாலென்ன? கிருஷ்ணர் ஜெயந்தியாக இருந்தாலென்ன? எல்லா நாளும் டிவியை பொழுதுபோக்குக்காக மட்டுமே தமிழன் பயன்படுத்துவான்.
எழுதியவர் லக்கிலுக் நாள் அக்டோபர் 10, 2007
நேரம் 9:09 மு.பகல்
என்ன இப்படி சொல்லிப்போட்டிங்க… காந்தி ஜெயந்தி அன்னிக்கி Wine Shopஆ மூடி வெச்சி இருக்கோமுல்ல அதை விட வேற என்ன வேணுமுன்னு கேக்குறாகு குவாட்டர் கோவிந்தன். தமிழனுக்கு எவன் செத்தா என்ன தான் சந்தோஷமா இருக்கணும் அது தான் முக்கியம்.
எழுதியவர் சந்தோஷ் நாள் நவம்பர் 24, 2007
நேரம் 5:25 பிற்பகல்
we all are happy in our nation. who? will give the happy of our life.
mr mahatma gandiji
எழுதியவர் r.govindasamy நாள் அக்டோபர் 1, 2008
நேரம் 7:49 மு.பகல்