ஒரு சம்பவம்………….
ஒரு குரு இறக்கும் தருவாயில் இருந்தார்.
அவரது சீடர்கள் அவரைச் சுற்றியிருந்தனர்.
அந்தக் குருவுக்கு வந்திருக்கும் நோயோ உயிருடன் கொல்லும் புற்று நோய்.
மரணப் படுக்கையில் அவருக்கு இருமல் வந்தது.
அவர் இருமும் போது சளியுடன் கூடிய எச்சில் வெளியே வந்தது.
அதைத் துப்பும் நோக்கோடு அவர் சுற்றும் முற்றும் பார்க்க அவரது தலைமைச் சீடன்
பாய்ந்து எழுந்து அந்த எச்சிலை தனது கையில் ஏந்துவதற்கு கையை நீட்டினார்.
குருவும் அவரது கையிலேயே தனது எச்சிலைத் துப்பினார்.
என்ன ஆச்சரியம்…………….. சீடனின் கையில் விழுந்தது, குருவின் எச்சிலல்ல. அழகான ரோஜா மலர். அப்படிப்பட்ட அன்பே உருவான குரு அவர். அந்தக் குரு இராமகிருஷ்ண பரமஹம்சர். சீடன் விவேகானந்தர். இந்தக் கதை உண்மையோ பொய்யோ என்பதல்ல முக்கியம். அது சொல்லும் கருத்து…………… அவர் ஒரு மகான் என்பதை. விவேகானந்தர், இராமகிருஷ்னர் இருவருமே இந்து மதத்தின் இரு தூண்கள். நல் வழியை மட்டும் போதித்த மகாத்மாக்கள்.
இன்னுமொரு சம்பவம்…………. ஒரு மிகப் பணக்க்காரரின் மகளின் திருமணம். அதற்கு அந்த மூதாட்டி பிரதம விருந்தினராக அழைக்கப்படுகிறார். திருமண விருந்து கோலாகலமாக நடைபெறுகிறது. உணவு அருந்தும் மேசையில் அனைவரும் இருந்து உண்கின்றனர், அந்த மூதாட்டி உட்பட. உண்டபின்னர் அனைவரும் சாப்பாட்டு மேசையை விட்டு அகல, அந்த மூதாட்டி மட்டும் அந்த மேசையில் எஞ்சிய உண்வையும் பண்டங்களையும் தனது பையில் எடுத்துப் போடுகிறார். அதைக் கண்ட அந்த பணக்காரர் அதிர்ச்சியடைந்து, அந்த மூதாட்டியை ஏன் அப்படிச் செய்கிறீர்கள் எனக் கேட்க. தனது ஆச்சிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கொண்டு செல்லத்தான் அதைச் சேகரித்ததாகச் சொல்கிறார். அந்தப் மூதாட்டி அன்னை தெரேசா. மதத்தின் மூலம் அன்பை உலகிற்கே புரியவைத்த புனிதத் தாய் அவர். அவரது அன்பான நடவடிக்கையைக் கண்டு வத்திக்கான் அவருக்கு செயின்ட் அந்தஸ்து வழங்குகிறது.
மேலுமொரு சம்பவம்……………. தனது போதனைகள் ஒவ்வொரு மக்களையும் சென்றடைய வேண்டும் என ஒவ்வொரு கிராமங்களுக்கும் நடையாகச் செல்கிறார் ஒரு மகான். அவரது போதனைகளை ஏற்றவர்கள் பலர் ஏற்காதவர் சிலர். ஒருநாள் தனது பிரதான சீடனுடன் ஒரு கிராமத்திற்கு அவர் செல்கிறார். மக்கள் பலர் அவரை வரவேற்று உபசரிக்கின்றனர். எல்லாருக்கும் தனது தெய்வீகச் சிரிப்பையே பதிலாக தருகிறார். துரதிர்ஷ்ட வசமாக அந்தக் கிராமத்தில் ஒருவர், அவரை மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டுகிறார். அவரைத் தொடர்ந்து சென்று மிகவும் கேவலமான வார்த்தைகளில் ஏசுகிறார். ஆனால் அந்த மகானோ அதற்கும் தனது புன்னகையையே பதிலாகத் தருகிறார். எதுவித முகச் சுளிப்பையும் காட்டாமல் உண்டான புன்னகை. இதை அந்த மகானின் சீடர் பார்க்கிறார். அவர் அந்த மகானிடம் கேட்கிறார், “ஏன் நீங்கள் அந்த மனிதருக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. உங்களால் அந்த மனிதன் கேட்ட கேள்விக்கோ, அவர் ஏசியதற்கோ, நிச்சயமாக சரியான பதில் சொல்லியிருக்க முடியுமே” அதற்கு அந்த மகான், “ஆனந்தா, இந்தக் கிராமத்தில் ஒரு பெண்மணி மிகவும் இனிமையான பண்டங்களைக் கொண்டு வந்து எமக்குத் தந்தாளே, அதை நான் பரிவுடன் வேண்டாமென்று மறுத்து அதை ஏற்றுக் கொள்ளவில்லையே. அப்போது அவள் அந்தப் பண்டங்களை என்ன செய்தாள். தன்னிடமே மீண்டும் எடுத்துக் கொண்டு செல்லவில்லையா! அது போல, அந்த மனிதரின் கடுஞ் சொற்களையும் நாம் பரிவுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் என்ன செய்ய முடியும். அதைத் தன்னுடனே திருப்பி எடுத்துக் கொண்டு போக வேண்டுமல்லவா?” அந்த மகான், புத்தர். எதிர்மறையான விசயத்தைக் கூட அன்பாக ஒருவருக்கு எடுத்துச் சொன்ன உன்னதமான வழிகாட்டி.
மதத்தின் பெயரால் மனித குலத்திற்கே செய்தியை அறிவித்தவர்கள் இவர்கள். அன்பு, அகிம்சை, மனிதாபிமானம் அனைத்துக்கும் எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர்கள். மதத்தின் மூலமாக அவர்கள் எதைப் பெற்றுக் கொண்டார்களோ தெரியவில்லை. ஆனால் அதே மதம் மூலமாக எமக்கு பலவற்றைப் பெற்றுக் கொள்ள, காரணமாக இருந்தவர்கள். ஆனால்…………… இன்றய செய்தி ஒன்று. “முன்னால் எம்பியும், விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம் விலாஸ் வேதாந்தி, ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.”
உன்னதமான கருத்து! இந்து மதத்திற்கு அதார்ரிட்டி என்று நினைக்கும் கும்பலை மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழகத்தின் முன்னேற்றத்தைத்தடுக்க முயலும் இந்த கும்பலை தடை செய்ய வேண்டும்.
எழுதியவர் puthumugam நாள் செப்டம்பர் 23, 2007
நேரம் 11:32 பிற்பகல்
மிகவும் அருமையான பதிவு.
மத வெறியர்களின் முகத்தில் அடிக்கும் பதிவு. இதுவரை நான் எந்த மனிதர்களையும் மதத்தின் பெயரால் போற்றியது இல்லை ஜேசுநாதரையும் நபிகள் நாயகத்தையும் தவிர. அதேபோல் தான் துறவிகளையும் துதித்ததில்லை. ஆனால் சுவாமி விவேகானந்தரும் இராமகிருஷ்ண பரமஹம்சரும் சாரதா தேவியும் விதிவிலக்கு.
காரணம் இவர்களை அனைவரும் அன்பே சிவம் என அன்பைப் போதித்தார். ஆனால் இன்றைய மதத்தலைவர்களோ வன்முறையை அல்லவா போதிக்கிறார்கள்.
எழுதியவர் வந்தியத்தேவன் நாள் செப்டம்பர் 24, 2007
நேரம் 1:26 மு.பகல்
வாவ்… மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.. தொடர்ந்து மென்மேலும் எழுதவேண்டும் நீங்கள்..:)
எழுதியவர் Lenin நாள் செப்டம்பர் 24, 2007
நேரம் 5:16 மு.பகல்
லீணா அண்ணா இந்த மேலே சொல்லப்பட்ட சம்பவங்களை நானும் படித்திருக்கிரேன். ஆனால் நீங்கள் சொன்ன கோணத்தில் சிந்தித்ததில்லை. நமக்கு எல்லா மதமும் அன்பைத்தான் போதிக்கின்றன. ஆனால் எந்த மதமும் அடுத்தவனை வெட்டவோ, குத்தவோ போதிக்கவில்லை, சில பசுத்தோல் போர்த்திய புலிகள் மதத்தின் பெயரால் அப்பாவி மக்களை சூடேற்றி அதில் குளிர்காய நினைக்கிறார்கள்.அதில் அப்பாவி மக்கள் பலியாகிறாகள். இதில் வேதனை என்னவென்றால் சில படித்த முட்டாள்களும் அந்த போலி மதவாதிகள் பின்னால் செல்வதுதான் — விஜி
எழுதியவர் விஜி நாள் செப்டம்பர் 25, 2007
நேரம் 1:25 பிற்பகல்
மதவெறி இருபது, இருபத்தொன்றாம் நூற்றாண்டுகளின் சாபக்கேடு. எல்லா மதத்தையும் ஒழிப்போம். மனிதநேயத்தை காப்போம்.
எழுதியவர் லக்கிலுக் நாள் அக்டோபர் 10, 2007
நேரம் 9:12 மு.பகல்
வருகை தந்த
புதுமுகம், வந்தியத்தேவன், லெனின், விஜி, லக்கி அனைவருக்கும் நன்றிகள்.
நாம் என்னதான் வாய்கிழியக் கத்தினாலும் இந்த மதவெறியை ஒழிக்க முடியுமா?
ஒழிக்க வேண்டுமென்பதுதான் விருப்பம். ஆனாலும்…….
எழுதியவர் லீனாரோய் நாள் அக்டோபர் 10, 2007
நேரம் 9:58 மு.பகல்
entha mathamum theeyathu ethaiyum kurippukalil pathivaakkavillai. manitharin varaivilakkanankal avattai kochai paduththi viddana. sadankukal, sampirathankal, moodanampikkaikal, sathikal enpana suyanalankalukkaka uruvakkappaddavai. avataik kalaynthu viddu uruppadiyanavatai eduthomeyaanal ellame samayam udpa pinpattath thakunthavaithaan.
ithu shenthurajanasuviyin thalmaiyana oru apipirayam.
எழுதியவர் Shenthurajanasuvi நாள் ஜூலை 17, 2008
நேரம் 2:36 பிற்பகல்
முதல் கதையில் சகிப்புத்தன்மையும் பரோபகரமும் இருந்தது
அடுத்தகதையில் மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்ற என்னமும் இருந்தது யார் பிறக்காக வாழ்கிறார்களொ அவர்கள் புனிதர்கள் ஆகிறார்கள்
மூன்றாவது கதையில் பொறுமையானவர்கள் பாகியசாலிகள் என்பது விளங்குகிரது
நான்கவது செய்த்யில் இருதரப்பிலும் தவருண்டு
நல்ல செய்த்கதைகளை தொடர்ந்து வழங்குங்கள்
அனுராதா
எழுதியவர் அனுராதா-Anuradha நாள் ஆகஸ்ட் 30, 2008
நேரம் 3:19 பிற்பகல்