ஐரோப்பாவில் ஒரு நாடு,
அந்த நாட்டின் குடி மகன் ஒருவன்,
மலேசியாவில் போதைப் பொருள் வைத்திருந்தான் என்று கைது செய்யப்பட்டான்.
அவனுக்கு மரண தண்டனை என்று மலேசிய அரசு தீர்ப்பளித்தது.
என்ன நடந்தது………….
அந்த ஐரோப்பிய நாட்டின் அனைத்துப் பத்திரிகைகளும் அலறின.
எங்கள் நாட்டுப் பிரஜையைக் காப்பாற்று என அந்த நாட்டின் அரசை வற்புறுத்தின.
மலேசியாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது அரசு.
தலை கீழாய் நின்று தனது குடிமகனை விடுவித்தது.
ஐரோப்பாவில் இன்னுமொரு நாடு.
அங்கும் ஒரு இளைஞன் ஒருவன்,
மிகவும் கட்டுப்பாடான வேறு ஒரு நாட்டில்,
பதினைந்து வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டான்.
அவனுக்கும் அந்த நாட்டு அரசு மரண தண்டனை விதித்தது.
அப்போதும் தனது நாட்டுப் பிரஜைக்காக வாதாடி தன் குடிமகனை மீட்டது அந்த நாட்டு அரசு.
ஆனால் வரிசையாக அந்நிய நாட்டின் கடற்படையால்,
கொல்லப்பட்டும், கடத்தப்பட்டும் சீரளியும் மீனவ மக்களைப் பற்றி,
எந்தக் கவலையும் இல்லாமல் ஒரு நாடு இருப்பது வேதனையாக இல்லையா?
மேற்படி சம்பவங்களில் விடுவிக்கப் பட்டவரகள் மிக மோசமான குற்றவாளிகள்.
அவர்களையே தன் நாட்டுப் பிரஜை என்பதால் காப்பாற்றுகிறது அவர்கள் அரசு.
ஆனால் இங்கோ அப்பாவிப் பொதுமகன் மடிகிறான். கண்டு கொள்ள யாருமே இல்லை.
என்ன இது……..?
ஏனிந்த அலட்சியம்?
இறப்பவன் தமிழன் என்பதாலா? அல்லது ஏழை என்பதாலா?
இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்று நினக்கும் மக்கள்,
இதை எப்படி கண்டு கொள்ளாமல் விடுகிறார்கள்.
ஒரு நடிகனுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்,
ஏன் ஒரு உயிருக்குக் கொடுக்க முடியாமல் இருக்கிறோம்.
எங்கே தப்பு நடக்கிறது?
விழிப்புணர்வு… விழிப்புணர்வு என்கிறோமே…….
அது எப்போது ஏற்படும் எமக்கு.
நல்ல கருத்தாழமிக்க கட்டுரை.. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
எழுதியவர் லெனின் நாள் செப்டம்பர் 12, 2007
நேரம் 4:52 பிற்பகல்
அருமையான கட்டுரை பலருக்கு சாட்டையடி கொடுக்கிறது
எழுதியவர் வந்தியத்தேவன் நாள் செப்டம்பர் 12, 2007
நேரம் 7:13 பிற்பகல்
இந்தியதேசவாதம் என்னும் வேடதாரிகளின் வாயை மூடவைக்கின்ற நியாயமான கேள்விகள்! லீனா
எழுதியவர் தேவன் நாள் செப்டம்பர் 13, 2007
நேரம் 11:42 மு.பகல்
லெனின், வந்தி மற்றும் தேவனுக்கு நன்றிகள்
எழுதியவர் leenaroy நாள் செப்டம்பர் 13, 2007
நேரம் 3:26 பிற்பகல்
மிகநல்ல கட்டுரை. வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்.
http://www.sivanes.wordpress.com
எழுதியவர் sivanes நாள் செப்டம்பர் 14, 2007
நேரம் 9:53 மு.பகல்
நன்றி சிவனேஸ்.
உங்கள் கவிதைகளும் நன்றாக இருக்கின்றன.
எழுதியவர் leenaroy நாள் செப்டம்பர் 14, 2007
நேரம் 3:18 பிற்பகல்
Please visit
http://www.mathimaran.wordpress.com
எழுதியவர் mathimaran நாள் செப்டம்பர் 17, 2007
நேரம் 12:17 பிற்பகல்