லீனாரோய் எழுதியவை | செப்டம்பர் 8, 2007

சாவின் விளிம்பில்..

 
சாவு எல்லாரையும் பயமுறுத்தும்
நித்திரையில் துயிலெழுப்பும்
ஐயோ! என அலறித் துடிக்கவைக்கும்
ஆனால் என்னை அது
நித்திரையில் மெல்ல
அணைத்துக் கொள்ளும்
மொத்தமாய் என்னைத்
தழுவிக் கொல்லும் 
 
இத்தினமும் முடிந்தது என
நித்திரைக்குப் போகும் இரவு
எல்லார்க்கும் விடிந்தது
என நினைக்க,
அத்தினமே எந்தன்
சாவின் நாள் ஆகிவிடும் 

ஆனாலும் கவலையில்லை…..
இன்றும் ஒரு நாளிருக்கு.  

மறுவினைகள்

  1. super aa irukku …Anaiththu KoLLum and thaluvi kollum

  2. நன்றி உமேஸ்……

  3. பிறந்தவன் எவனும் மரணிக்காமல் மார்க்கண்டேயனாக வாழ்ந்ததாக சரித்திரத்தில் சான்றில்லை. மரணம் தவிர்க்க இயலா சரணம்.

  4. உண்மைதான் லக்கி
    ஆனால் மரணம் என்றது ஒரு பயமும் கூடவே வருகிறதே!

  5. அண்ணா இன்னுமொரு நாளா..

    இன்னும் ஒரு நூறண்டுக்கு மேலே உள்ளது

  6. பிரபலமாக, அன்பான குடும்பத்தில் வெற்றிகரமான வாழ்வை நடத்துபவர்க்கு மரணம் நினைவு வாராது.

    30 வயதிலும் மரணம் பயம் காட்டும் நபர்கள் உண்டு.

    கடமைகள் பாக்கியாக இருந்தால், நிலையில்லாத வாழ்வை நடத்தினால்,

    பல தில்லுமுல்லுகளால் காரியங்கள் நடந்திருந்தால், மற்றவர் இறந்து போகும் எண்ணம் மேட்டால் மரணம் பயம் தரும்.

    பயமே சுபாவம் என்பவருக்கு எந்த வயதிலும் மரணம் பயம் காட்டும்.

    இந்த பயம் உள்ளவர் இதை விலக்க முடியுமா?

    கடவுளை அறிந்தவுடன் பயம் பெரும்பாலும் மறைந்துவிடும்.

    நம்செயலை இறை செயலாக மாற்றினால் மரணபயம் குறைந்து மறையும்.

    இதற்காக நாம் படித்த முறைகளை நினைவுகூர்ந்தால் 50க்கு மேல் நினைவில் வரும்.

    எந்த முறையும் முழுப்பலன் தரும்.

    காணாமற்போன பொருளை நாம் தேடுவதற்குப்பதிலாக பிரார்த்தனை- யால் பெறுவது இறை செயலாக நம் செயலை மாற்றுவது. மரண பயத்தை போக்கலாம்

    அனுராதா

  7. m


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்