லீனாரோய் எழுதியவை | செப்டம்பர் 5, 2007

புதிய பூவிது………..


வலையுலகிற்கோ, இணையுலகிற்கோ நான் புதியவன் இல்லையாயினும்,
இந்த வலைப் பூவில் மாலை தொடுப்பதில் புதியவன்.
உலகெங்கும் கொட்டிக் கிடக்கும் பூக்களின் மத்தியில் தானும் விழத் துடிக்கிறது எனது பூவும்…….
இந்தப் பூ நாறுமோ? தேறுமோ? நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
இன்று முதல்  என் கானம் உங்கள் கணணி வாசல் வழி வந்து, உங்கள் கதவைத் தட்டும்.
ஏற்பதும் மறுப்பதும் உங்கள் பொறுப்பு.  
இன்றைய தினம் (05.09.2007) எனக்கு ஏனோ நல்ல நாளே! 
இந்த நாளில் என் முதல் பூவை கையில் அளிக்கிறேன்……..  


 தினமும் உதிரும் பூக்கள்………

அவள் ஒரு 21 வயது நிரம்பிய இளம் தமிழ் நங்கை.
“மீன் பாடும் தேன் நாடு” என அழைக்கப்படும். ஈழத்தின் மட்டக்களப்பைச் சேர்ந்தவள்.
அழகான தேவதை ஒன்றை உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா……..?
அப்படியேயிருப்பாள் அவள். மிகவும் வசதியான குடும்பத்தின் அழகான இராஜகுமாரி அவள்.
 
ஒரு நாள் (வந்தே இருக்கக் கூடாத ஒரு நாள்)……….
ஒரு ஆசிரியர் நேர்முகப் பரீட்சைக்கு கொழும்புக்கு சென்று,
மீண்டும் மட்டக்களப்பு நோக்கி பஸ் வண்டியில் திரும்பி வந்து கொண்டிருந்தாள்.
பஸ் மட்டக்களப்பிற்கு 30 கிலோ மீற்றர் தூரத்தில் வரும்போது இராணுவத்தால் மறிக்கப்படுகிறது.
திமு திமுவென பஸ்ஸில் ஏறியது இராணுவம்.
 
அதில் பயனித்த 17 இளைஞர்களையும், 3 யுவதிகளையும் துப்பாக்கி முனையில் கீழே இறக்குகின்றனர்.
அதில் அவளும் அடக்கம். அனைவருக்கும் பயத்தில், இதயத்தில் உள்ள இரத்தமே உறைகிறது.
இரணுவம் என்றாலே அந்தக் கொடூரம் அவர்களுக்கு எப்படி வருகிறதோ தெரியவில்லை. 
அவர்களின் முகங்களில் கொலை வெறி தாண்டவமாடுகிறது.
ஒவ்வொருவரிடமும் புலிகளுக்கும் உங்களுக்கும் சம்மந்தம் உண்டா எனக் கேட்கப் படுகிறது.
அனைவருமே இல்லை என்றே பதிலளிக்கின்றனர்.
ஆனாலும் அவர்கள் வரிசையாக நிற்க வைக்கப் படுகின்றனர்.
நடக்கப் போவது அவர்களுக்குத் தெரிந்தே இருக்கிறது.
பயத்தில் உடல் நடுங்குகிறது. ஏதேதோ நினவுகள் வந்து போகின்றன.
 
அதிகாரியின் ஒரு கண்ணசைவைத் தொடர்ந்து,
திடீரென ஒரு இயந்திரத் துப்பாக்கி சீறிக்கொண்டு குண்டுகளைத் துப்புகிறது.
வரிசையாக எங்கள் கண்மணிகள் தரையில் சாய்கிறார்கள். 
குருதிக்கடல் தாய் மண்ணை நோக்கி ஓடி அதனுடன் கலக்கிறது…….

இளம் குருத்துகளை வீழ்த்திய இராணுவம் கொக்கரித்தபடி நகர்கிறது.
எவ்வளவு கனவுகள், எவ்வளவு ஆசைகள், எவ்வளவு காதல்கள்.
எல்லாமே…..! எல்லாமே……!! குருதிக் குளத்தில் மிதக்கிறது.
மொத்தமாக இருபது உயிர்கள். 
 
தமிழனின் உயிருக்கு ஏன் மதிப்பில்லாமல் போயிற்று?
கொலை செய்யும் அதிகாரத்தை யார் கொடுத்தார் இவர்களுக்கு?
கடவுள் கூட அந்தக் கொடியவர்கள் பக்கம்தானா?
என்ன நியதி இது?
 
அவள்……., அந்தத் தேவதையின் வாயிலிருந்து கடைசியாக வந்த வார்த்தைகள்,
” ஐயோ…..! என் அடி வயிறு வலிக்கிறதே…….!! “
அந்த வார்த்தைகளுடன் அவள் உயிர் காற்றில் கலக்கிறது…………….
 
ஆ…..இரண்டு விசயங்களை உங்களுக்குச் சொல்ல மறந்து விட்டேன்………..
1, அந்தத் தேவதை யாருமல்ல, எனது சகோதரியின் இரண்டாவது மகள். என் ஆசை மருமகள்.
2. அந்த இராணுவம் இலங்கை இராணுவமல்ல. 
 

அந்த உயிர்ப் பூவிற்கு, என் வலைப்பூவைக் காணிக்கையாக சமர்ப்பிக்கிறேன்…………   


மறுவினைகள்

  1. மிக அழகான கட்டுரை லீனா அண்ணா உணர்வுகளின் குவியலாக இருக்கிறது.

  2. வலை நல்லாக இருக்கின்றது ஆக்கமும் வடிவமைப்பும் அருமை. யாருடைய கண்கள் அவை?

  3. நன்றி லெனின்.
    நன்றி வந்தி.
    கண்கள் எனக்கு மிகவும் பிடித்த பெண்ணுடையது.

  4. i’m really sorry about the true-story.

  5. மறக்க முடியாத வலிகள்…எங்கள் வீட்டில் ஒருவரல்ல…பலர்….

  6. நல்ல படைப்பு லீனா அண்ணா நீங்கள் சொல்வதில் இருந்து இந்திய இராணுவம் என்பதை அறியகூடியதாக இருகின்றது இந்திய அமைதிப்படையாக வந்து இந்திய அட்டூழியப்படையாக அட்டூழியம் செய்தனர் இந்திய இராணுவத்தினர் இதற்கு எல்லாம் மூல காரணம் ராஜீவ் என்னும் போர்குற்றவாளி

    ஈழவன்85

    thamilamutham.blogspot.com

  7. நன்றி தூயா.
    நன்றி ஈழவன்.
    இந்த உணர்வுகள் எங்கள் எல்லாருக்கும் பொதுவானது.

  8. ஏனதிகம் எழுதுவதில்லை?

  9. லீனா அண்ணா !!
    இந்த வலியும் வேதனையும் தமிழீழத்தில் பிறந்த அனைவரும் ஒருமுறையாயினும் அனுபவித்ததே. எமது தேசம் விடுவிக்கப் படும்போது இந்த இரணங்கள் ஆறும்.

  10. உங்க வலி எனக்கு புரிகிறது லீனா.

  11. இந்திய அமைதி(???) படை தந்துவிட்டு வந்த வலிகள் எப்போது ஆறுமோ ??

  12. nalla eluthurinkal entha pani todara enn valukal..
    nanrii
    enum anpudan ..


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்